செய்வினையில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்?
எதிரிகளால், மற்றவர்களால் செய்யப்பட்ட செய்வினை தோஷம் விலக, செய்வினை பாதிப்பை திருப்பி விட, மேலும் மாந்த்ரீக தீய பிரபோகங்களை அழிக்க, அதன் தாக்குதலில் இருந்து மீள மந்திர சாஸ்திரத்தில் பல வழிமுறைகள் இருந்தாலும் அனுபவத்தில் பலன் தரும் வழிமுறை பின் வருமாறு.
சுதர்ஷனர் :
ஸ்ரீமன் நாராயனணின் கையிலிருக்கும் மகா மகத்துவம் பொருந்திய ஆயுத சக்தியான இவர் உக்ரமானவர். சனியின் அம்சம், கலியுகத்தில் சீக்கிரம் பலன் தரக்கூடியவர். இவரின் யந்திரம் மந்திரம் பிரயோகம் முழு நம்பிக்கையுடன் திடமான சிந்தனையுடன் செய்யவும். * நல்ல நாளில் யந்திரத்தை எழுதி பூஜையில் வைத்து கணபதி, குலதெய்வம், ஸ்ரீமன் நாராயண அஷ்டாச்சரி மந்திரம் ஐபித்து பின் சுதர்சனரின் மந்திரத்தை தினம் ஜெபம் செய்யவும். மொத்தம் பத்தாயிரம் உரு ஜபிக்கவும்.
வசதிப்படி தினம் சிறிதளவு ஜபித்து வரவும். பத்தாயிரம் ஜபம் பூர்த்தி ஆனதும் தங்களே நாயுருவி சமீது, வெள்ளைகடுகு, துளசி இலை, அத்தி சமீது, நெய், தேன் கொண்டு ஆயிரம் தடவை மந்திரம் சொல்லி ஹோமம் செய்யவும். முடியாவிட்டால் தகுந்த சாஸ்திரிகளை கொண்டு ஹோமம் செய்யவும். சங்கல்பம் செய்யும்போது சுதர்சன மந்திர சித்திக்காக செய்வதாக வேண்டிக்கொள்ளவும்.
ஹோமத்தின்போது தாங்கள் ஜபம் செய்த மந்திரத்தையே பயன் படுத்தவும். பின் முடிந்த வரை அன்னதானம் செய்து பெருமாள் கோவிலில் துளசியால் விஷ்ணு சகஸ்ர நாம அர்ச்சனை செய்யவும். மந்திரம் சித்திக்கும். அதன்பிறகு மற்றவர்க்கு பயன்படுத்தலாம்.
சிறு தகடுகளில் யந்திரம் வரைந்து வைத்துக் கொள்ளவும். பாதிக்கப்பட்டவர் வீட்டில் பூஜை செய்வதாக இருந்தால், வீட்டில் கடல் நீர் கொண்டு கழுவி பின் நல்ல தண்ணீரில் மஞ்சள், கோமயம் கலந்து கழுவவும். பின் அந்த வீட்டின் உள் தரையில் செங்கல் அடுக்கி ஹோம குண்டம் தயார் செய்து, ஓர் கலசம் வைத்து கலசத்தில் சுதர்சனரை ஆவாகனம் செய்து முறைப்படி பூஜித்து தர்பை கட்டு கையில் வைத்து கலசத்தை தொட்டுக் கொண்டு இந்த வீட்டில் இந்த காரியத்திற்காக பூஜை செய்யப் போகிறேன். காரியம் நன்றாக நடக்க வேண்டி பிரார்த்தித்து மூலமந்திரம் 108 தடவை ஜபிக்கவும்.
பின் ஹோமத்தை ஆரம்பித்து அக்னியில் சுதர்சனர் எழுந்தருளி ஹோமத்தை ஏற்றுக்கொண்டு தீய சக்திகளை விலக்கி குடும்பத்தை காக்க, அல்லது என்ன கோரிக்கையோ அதனை வேண்டிக்கொண்டு ஹோமம் செய்யவும். மூலமந்திரம் கூறியபடியே வெண்கடுகு, பஞ்ச கவ்யம், நாயுருவி சமித்து, சீந்தில்கொடி என ஒவ்வொன்றிலும் 270 தடவை மந்திரம் கூறி ஹோமம் செய்யவும். (சுமார் 2 மணி நேரம் ஆகலாம்) பின் ஹோமத்தில் ஒரு தேங்காயை உடைத்து தண்ணீர் உள்ளே ஊற்றவும்.
பூஜையை முடித்து கலச நீரை வீட்டின் உள் தெளிக்கவும். சிறு பாட்டிலில் ஊற்றி வீட்டை சுற்றி புதைக்கவும். சிறு யந்திரங்களை பாட்டிலின் உள்போட்டு புதைக்கவும் அல்லது தொங்கவிடவும். ( நான்கு திசைகளிலும்).
ஹோம சாம்பலையும் இதேபோல் செய்யவும். கலச நீரை உள்ளுக்கு சாப்பிடவும். இந்த பூஜையை அறிந்து செய்தாலும், அறியாமல் அரைகுறையுடன் செய்தாலும் பக்தி பூர்வமாக மன நம்பிக்கையுடன் செய்தாலே சுதர்சனர் ஏற்று பலன் தருவார். எத்தனை கடுமையான செய்வினை எந்த மந்திரம் தந்திரம் செய்திருந்தாலும் அந்த இடத்தைவிட்டு விலகி விடும். இந்த பூஜையை சமயோசிதம் போல பல கார்யங்களுக்கு பயன் படுத்தவும். வீட்டில் உள்ளவர்கள் அனைவருக்கும் சுதர்சன யந்திரம் தாயத்தாக்கி தந்து அணிய சொல்லவும்.
0 கருத்துகள்